தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் சிங்கராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தொகுப்பாளினியாக ஆரம்பித்து பின் ஐயா, சந்திரமுகி போன்ற படத்தின் மூலம் நடித்து பிரபலமானார். தமிழ், மலையாளம் என முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்து வரும் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகையானாலும் சில சர்ச்சையிலும் கிசுகிசுக்களிலும் சிக்குவது இயல்புதான்.
View this post on Instagram
அந்தமாதிரி நடிகை நயன்தாராவும் காதல் சிசுகிசுக்களில் சிக்கி வந்தார். அதையெல்லாம் காதில் போடாமல் தற்போது 5 ஆண்டுகளுக்கும் மேலாக விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருகிறார். எங்கு சென்றாலும் ஜோடியாக புறப்படும் நயன் – விக்னேஷ் சமீபத்தில் விமானத்தில் இருந்து இறங்கி வரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்ட்டானது.
தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிதீவிரமானதால் பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட விழிப்புணர்வுகள் ஏற்படுத்த புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்கள். இந்நிலையில், நடிகை நயன் தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை குமரன் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
View this post on Instagram
அதில் நயன்தாராவிற்கு போடும் செவிலியரின் கையில் ஊசி இல்லாமல் போஸ் கொடுப்பதை ரசிகர்கள் இணையத்தில் கிண்டல் செய்து எங்க ஊசிய காணோமே என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.