
ஆசிரியர் ஒருவர் சிறுவனை அழைத்து பாசமாக எதற்கு அழுது கொண்டே பள்ளிக்கு வருகிறீர்கள் அழுகாமல் வரவேண்டும் என்று புத்திமதி கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரல் ஆவது வழக்கம். பெரும்பாலும் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் அழுது கொண்டேதான் செல்லும் .
அதிலும் எல்கேஜி ,யுகேஜி குழந்தைகள், அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் தனது தாய் தந்தையரை விட்டு செல்ல மாட்டேன் என்று அழுகும் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். இது ஒரு பக்கம் சிரிப்பை ஏற்படுத்தினாலும் மற்றொரு பக்கம் மனதிற்கு சற்று கவலையை தரும். குழந்தைகள் அழுவதை பார்ப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்கும். அப்படித்தான் ஒரு சிறுவன் தினமும் பள்ளிக்கு அழுது கொண்டே வருகிறார்.
அவரை அழைத்த ஆசிரியர்கள் அன்பாக எதற்கு நீங்கள் அழுது கொண்டே வருகிறீர்கள், என்ன ஆயிற்று என்று ஒவ்வொரு கேள்வியாக கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தை பதில் கூறுகிறார். அந்த ஆசிரியர் ஒவ்வொரு கேள்வியும் பொறுமையாக குழந்தையை மிரட்டாமல் அன்பாக கேட்கின்றார். இது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.
அந்த சிறுவனும் தனக்கு பாட்டி இல்லை என்றும், தனது பாட்டி பெங்களூருக்கு சென்று விட்டதாகவும் அதனால்தான் அழுததாகவும், எனது அம்மா நான் சாப்பிடவில்லை என்று தன்னை அடித்ததாக ஆசிரியரிடம் கூறுகிறார். மழலை கொஞ்சம் மொழியில் அவர் பேசுவதை பார்ப்பதற்கும், அந்த ஆசிரியர் கேள்வி கேட்பதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…