
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் பிரமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. அதிக அளவு ரசிகர்களைக் கொண்ட ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சி தமிழில் 5 சீசன்களை கடந்து, தற்போது 6வது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 60 நாட்களுக்கு மேல் கடந்து நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது.
இந்நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 40 நாட்களே மீதம் உள்ளது. யார் வெற்றி பெறுவார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து 8 பேர் வெளியேறி உள்ளனர். தற்பொழுது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.
ஆயிஷா மற்றும் ராம் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவார்கள் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் உலக நாயகன் தொகுத்து வழங்கும் எபிசோடுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். தற்பொழுது இன்றைய நாளின் முதல் பிரமோ வெளியாகியுள்ளது.
இதில் கமலஹாசன், ‘இவங்க எத்தனை வேஷம் போட்டாலும் நல்ல மழை பொழியும் போது உண்மை முகம் தெரிய ஆரம்பிச்சிடும். இருந்தாலும் அதற்கும் இன்னொரு வேஷம் போட்டிருக்காங்க. இப்படி எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை பிதுக்கிக்கிட்டு வெளியே வரத்தான் செய்யும். இவங்களுக்கு இவங்களைத்தான் பிடிக்கும். இவர்களுக்காக தான் சப்போர்ட் பண்ணுவாங்க என்ற அந்த சார்பு வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது. இம்முறை நடக்கப் போகின்ற இரண்டு எவிக்சனில் இந்த டயனமிக்ஸ் எப்படி மாறுகின்றது பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.
வைரலாகும் ப்ரோமோ வீடியோ இதோ….