‘கோலி சோடா’ திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘கோலி சோடா’. இத்திரைப்படம் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படத்தில் பிரபலமான நடிகர்கள் யாரும் நடிக்காவிட்டாலும் நல்ல கதையம்சம் கொண்ட காரணத்தினால் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.
இந்த திரைப்படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, சீதா உள்ளிட்ட பல இளம் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.. இதில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை சாந்தினி எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
இத்திரைப்படம் வெளிவந்ததன் மூலமாக சிறுவர்களால் எதுவும் செய்ய முடியும், சாதிக்க முடியும் என்று பலருக்கும் உணர்த்தியது. இத்திரைப்படம் மார்க்கெட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். திரைப்படத்தில் நடித்த பல்வேறு சிறுவர்களும் தற்பொழுது சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வளர்ந்து உள்ளார்கள்.
அந்த வகையில் நடிகை சாந்தினி விக்ரம் நடிப்பில் வெளியான 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தில் விக்ரமின் தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.
இதன்பின் நடிகை சாந்தினி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்பொழுது ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.