நடிகை ஸ்ரீதேவியின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. ‘ரிக்சா மாமா முதல் ஆவாரம் பூ’ வரை குழந்தை நட்சத்திரமாக 6 படங்களில் நடித்துள்ளார். பிறகு இவர் 2002ல் வெளியான ‘ஈஸ்வர்’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகி அறிமுகமானார்.
நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நாயகியாக நடித்த காதல் வைரஸ், பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2016ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு ரூபிகா என பெயர் வைத்தார். திருமணத்திற்கு பின்னரும் ஸ்ரீதேவி ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஸ்ரீதேவி. அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் ஒன்றை அணிந்து புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ‘என்னம்மா டிரஸ் இப்படி கிழிஞ்சு தொங்குது’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்….