என்னாது! இவங்க விஜே மணிமேகலையா? கலாய்த்து தள்ளிய கணவர்

சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் விஜே மணிமேகலை.

தன்னுடைய சுட்டித்தனமான பேச்சால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மணிமேகலை, பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடன இயக்குனரான ஹீசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

   

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மேலும் புகழ்பெற்றுள்ள மணிமேகலை, கொரோனா ஊரடங்கை கிராமத்திலேயே கழித்து வருகிறார்.

கிராம விளையாட்டுகள் முதல் சமையல் வரை அசத்தி வருகிறார், இந்நிலையில் 2010ம் ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டுள்ளார் மணிமேகலை.

இந்த படத்தை ரசிகர் ஒருவர் ஷேர் செய்ய, ப்பா யார்ரா இந்த பொண்ணு.. இவ்ளோ மேக்கப் போட்டு என பங்கமாக கலாய்த்துள்ளார் அவரது கணவரான ஹீசைன்.