“என்னை ஏன் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை”…? பிரபல TV-க்கு ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை சரமாரி கேள்வி…

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த மிகப் பிரபலமான தொடர் செம்பருத்தி. இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சீரியல் இது. இந்த சீரியலுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்படிப்பட்ட இந்த சீரியல் 5 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. அதன் கிளைமாக்ஸில் வில்லி நந்தினி மற்றும் வனஜா ஆகியோர் உயிரிழப்பது போலவும், இறுதியாக அகிலாண்டேஸ்வரியும் உயிரிழந்து விடுவதாக சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் இந்த சீரியல் முடிந்தவுடன் குழுவினர் அனைவரும் கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது.

அந்த நிகழ்ச்சியில் சீரியலில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் வில்லி நந்தினி ரோலில் நடித்து வந்த நடிகை மௌனிகா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். அதாவது இறுதியாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ஜீ தமிழ் மீது அவர் புகார் அளித்துள்ளார்.

செம்பருத்தி சீரியல் காக என்னால் முடிந்த அளவிற்கு பெஸ்ட் கொடுத்துள்ளேன். ஆனால் சேனல் எனக்கு திருப்பித் தரவில்லை. மெயின் ரோலில் நடித்த நடிகையை மட்டும் கொண்டாடுகின்றனர். எனக்கு எந்த மரியாதையையும் கொடுக்க வேண்டும் என தோன்றவில்லையா ஜீ தமிழ்? என்னை எதற்காக அழைத்தீர்கள். என்னை மிகவும் அசிங்கப்படுத்தி விட்டீர்கள். நான் மிகவும் சோகமாக இருக்கிறேன். இருந்தாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு கொண்டாடுவதால் நான் மகிழ்ச்சி பெறுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.