விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சுனிதா. இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வடமாநிலத்தை சேர்ந்த இவர் குழந்தை போல கொஞ்சும் தமிழில் பேசுவது ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வைரல் தான்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக நடித்து வருகிறார். அதில் இவர் தமிழில் சொதப்புவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடிக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்திருப்பார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
அவ்வப்போது பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் தனது அப்பாவின் பிறந்தநாளுக்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.