என் மரணத்திற்குப் பின் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறாயா? மருமகளை கட்டிபிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார்!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாமியார் வேண்டுமென்றே தனது மருமகளை கட்டி பிடித்து வைரஸை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

   

ஆனால் தன்னருகில் யாரும் வராமல் தன்னை ஒதுக்குவதாக அவருக்கு கோபம் வந்துள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த மருமகளிடம் வந்த அப்பெண் அவரை கட்டிபிடித்துள்ளார்.

அப்போது, உனக்கும் கொரோனா வைரஸ் வர வேண்டும். என் மரணத்திற்குப் பிறகு நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா? என கூறி அதிரவைத்துள்ளார்.

இந்த நிலையில் மருமகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது,

ஆனால் இன்னும், வைரஸ் எவ்வளவு ஆபத்தானது மற்றும் அது ஒரு குடும்பத்தை எவ்வாறு சிதைக்கக்கூடும் என்பதில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.