எலியை பிடிச்சு என்னடா பண்ணி வைச்சுருக்கீங்க? லாக்டவுணில் இன்னும் எதையெல்லாம் பார்க்கணுமோ..!

இந்த கொரோனா கால லாக்டவுண் பலருக்கும் போர் அடிக்க வைத்துள்ளது. அதானாலேயே ரசனையாக எதையாவது வித்தியாசமாக செய்து தங்களை தாங்களே எனர்ஜி ஏற்றிக்கொள்கிறார்கள்.

   

குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம் என ஒரு சினிமா பாட்டுவரும். இங்கே ஒரு இளைஞர் அப்படி எலியைப் பிடித்து கயிற்றால் கட்டிவைத்து பாடம் எடுத்திருக்கிறார். பொதுவாக கொரோனா காலத்தில் முகத்தில் மாஸ்க் போடவும், கைகளை அடிக்கடி சானிட்டைசர் செய்து கொள்ளவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அதை இங்கே ஒரு இளைஞர் எலிக்கு அப்ளை செய்து காமெடி செய்துள்ளார்!

அதில் அவர் எலியிடம், மாஸ்க் போடாமல் எங்க வீட்டுக்குள்ள வருவியா? சானிட்டைசர் போடாம எங்க வீட்டுக்கு வருவியா? நீ எங்கையெல்லாமோ சுத்திட்டு எங்க வீட்டுக்கு வந்து நோயைப் பரப்புவ…என திட்டி, திட்டி அட்வைஸ் செய்கிறார். முழு பாடத்தையும் கேட்ட எலி ஒன்றுமே புரியாமல் கண்களை உருட்டி, உருட்டி முழிக்கிறது. லாக்டவுண் நேரத்தில் அந்த எலியை என்னடா பண்ணி வைச்சுருக்கீங்கன்னு நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.