தமிழ் சினிமாவில் கிராமத்து கதாபாத்திரம் என்றால் அனைவரது ஞாபகத்திற்கும் வருவது நடிகை காந்திமதி தான். மனோரமா எனும் இன்னொரு ஆளுமையால் இவரது திறமை முழுதாக ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
என்னதான் மனோரமா பல படங்களில் நடித்தாலும் காந்திமதி நடித்த சில படங்களில் அவரது கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார். இருந்தாலும் மனோரமா அளவுக்கு அவருக்கு பெயர் கிடைக்கவில்லையே என்ற சோகம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்ததாம்.
காந்திமதி நடித்த சுவரில்லாத சித்திரங்கள், மண்வாசனை, கரகாட்டக்காரன், 16 வயதினிலே, முத்து போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
அப்படிப்பட்ட காந்திமதி சினிமாவில் குணச்சித்திர நடிகையாக மட்டுமல்லாமல், ஹீரோயின் வேடத்திலும், கிளாமர் நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் சினிமா மார்க்கெட் குறைந்த பிறகு மை டியர் பூதம், கோலங்கள் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால் காந்திமதி சினிமாவில் கவனம் செலுத்தியதால் தன்னுடைய சொந்த வாழ்க்கையை கோட்டை விட்டார். சரியான வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் விட்டதால் கடைசிவரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
தன்னுடைய தங்கையின் உதவியை நாடியிருந்த காந்திமதி, அவர்களுடைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தாராம். ஆனால் பணம் இருக்கும் வரை சொந்தம் இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப அவர் சம்பாதிக்கும் வரை அவரை தங்கத்தட்டில் வைத்து தாங்கிய அவரது தங்கை காந்திமதிக்கு புற்றுநோய் வந்து அவஸ்தைப்பட்ட போது கண்டுகொள்ளவில்லையாம். காந்திமதியின் கடைசி காலங்களில் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்கக்கூட ஆளில்லாமல் தனிமையில் மனம் நொந்தே இறந்துவிட்டாராம்.