
கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தின் போது கல்லூரி மாணவர்கள் இணைந்து நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கேரள மாநிலத்தில் ஓணம் என்பது மிகவும் பிரபலமான பண்டிகை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான பண்டிகை உள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரைக்கும் பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை என்று பாரம்பரியமாக கொண்டாடி வரும் நிலையில் கேரளாவை பொருத்தவரையில் ஓணம் பண்டிகை என்பது அவர்களின் ஒரு முக்கிய பண்டிகையாகும். இந்த பண்டிகையின் போது பெண்கள் அழகாக புடவை அணிந்து பூக்களால் வண்ண கோலம் இட்டு மகிழ்வார்கள்.
மேலும் கல்லூரிகளில் நிகழ்ச்சிகளும் நடைபெறும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அழகாக புடவை மற்றும் வேட்டி சட்டை அணிந்து பல பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். இது பார்ப்பதற்கே கண்ணை கவரும் வகையில் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதை வீடியோவை நீங்களும் பாருங்கள்….