
நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகை ஜான்வி கபூர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாவின் இடத்தை பிடிக்க மகள் தற்பொழுது முயற்சி செய்து வருகிறார். ஸ்ரீதேவி போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.
வளர்ந்து வரும் நடிகையான ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவி இறந்த ஆண்டான 2018ல் திரை உலகில் கால் பதித்தார். இவர் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பினால் மக்களின் ஆதரவை பெற்றார். இப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதன் மூலம் அவருக்கு பல விருதுகளும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘குட் லக் செரி ‘ திரைப்படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இப்படம் தமிழில் நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் ரீமிக்ஸ். தற்பொழுது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்ககூடிய ஜான்விகபூர். இவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கடல் கன்னியாய் மாறி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.