திடீரென அருள் வந்து பெண் சாமியார் ஆடிய ருத்ர தாண்டவம் …! என்ன ஒரு ஆக்ரோஷமான காட்சி பாருங்க..!

சாமியார்களின் ஆன்மிக போதனைகளைக் கேட்கவும், அவர்களிடன் தரிசனத்தைப் பார்க்கவும் எப்போதுமே பக்தகோடிகள் காத்திருப்பார்கள். அந்தவகையில் இப்போது இணையத்தில் ஒரு பெண் சாமியாரின் வீடியோ வைரல் ஆகிவருகிறது.

அவர் அதில் சாமியாக தன்னை பாவித்து அது போல் அலங்காரம் செய்துள்ளார். தன் தலைக்கு மேல் சாமி விக்கிரகம் ஒன்றையும் தூக்கி வைத்துள்ளார். அது கீழே விழாத நிலையில் அவர் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். ஒரு கையில் அரிவாள், இன்னொரு கையில் கத்தி என வைத்துக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். கீழே பக்தர் தரையில் படுத்துக்கொள்ள அவர் மேல் ஏறி நின்று பத்ரகாளி வதம் செய்யும் காட்சியைக் கண்முன்பே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

தன் நாக்கு முழுக்க மஞ்சளைத் தடவிக்கொண்டு நாக்கை வெளியே நீட்டுகிறார். பார்க்கவே இந்தக் காட்சிகள் நம்மை மிரட்சியடைய வைக்கிறது. இவரை எல்லம்மா என்னும்பெயரில் ஆந்திராவில் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். 8 லட்சம் பேர் அவரின் இந்த தரிசனத்தை வியந்து பார்த்துள்ளனர். இதோ நீங்களே அதைப் பாருங்களேன்…..