
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் தற்போது சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியை போன்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உருவாகுவது கிடையாது. அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை கடந்து 6வது சீசனில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது.
தமிழில் மட்டுமல்லாமல் மற்ற பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி தற்பொழுது பாதி நாட்களுக்கு மேல் கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. இதில் தற்பொழுது 12 போட்டியாளர்களே மீதம் உள்ளனர்.
இறுதியாக இந்நிகழ்ச்சியில் இருந்து ராம் வெளியேற்றப்பட்டுள்ளார். வெற்றியாளர் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் போட்டியாளர்களை பார்த்து அவர்களின் பெற்றோர்களைப் பற்றி கூறுமாறு கேட்கின்றார்.
அதற்கு மைனா “அவங்க 2பேருமே என் அம்மா அப்பா கிடையாது. அவங்க 2பேருமே என் குழந்தைகள் தான். நிஜமாகவே நான் அவங்கள மிஸ் பண்ணுறேன்” எனக் கூறி அழுகின்றார். அதேபோல் அசீம் “வெளிய எவ்வளவு ஸ்ட்ரோங் ஆக இருந்தாலும் நமக்குள்ள அந்த பீல் இருக்கும். அது எனக்கு எப்பவுமே இருக்கு” எனக் கூறி கண் கலங்குகின்றார்.
அதேபோன்று கதிரவன் “அவங்க போட்ட அந்தப் பிச்சையில் தான் நான் இங்க இருக்கேன்” எனக் கூறுகின்றார். மேலும் கமல் பேசுகையில் “அம்மா, அப்பா பற்றிப் பேசினீர்கள். இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. இதைத் தெளிவாக சொல்லாமலேயே நாம் அவர்களை இழந்து விடுவோம். அப்படி ஒரு குழந்தை தான் நான். உங்களை பார்க்க பொறாமையாக இருக்கின்றது” எனக் கூறி கண் கலங்குகின்றார். இதைத் தொடர்ந்து ஷிவினும் விம்மி விம்மி அழுது கண்ணீர் வடிக்கின்றார்.
ப்ரோமோ வீடியோ இதோ…