பிரபல திரைப்பட இயக்குனர் அருண்காமராஜ் மனைவி கொரோனாவால் உயிரிழந்துவிட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டில் வெளியான கனா திரைப்படம் மூலம் இயக்குனரான அருண்காமராஜ், பாடல் ஆசியர், நடிகர் என தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
இவர் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் நெருப்புடா படால் மிகவும் பிரபலம், அதுமட்டுமின்றி விஜயின் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலையும் இவர் தான் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இவரின் மனைவி சிந்து அருண் காமராஜ் கொரோனா பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதைத் திரைப்பிரபலங்கள் பலரும் உறுதி செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவது, திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.