கல்யாணத்தில் குத்து பாட்டுக்கு….. டான்ஸ் ஆடிக்கிட்டே என்ட்ரி கொடுத்த மணப்பெண்…. இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ…!!!

திருமணத்தில் மணப்பெண் குத்துப்பாடலுக்கு நடனமாடிக்கொண்டே மணமேடைக்கு வந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். முன்பெல்லாம் திருமணத்தை மிகவும் எளிய முறையில் கோவில்களில் அல்லது சற்று வசதி படைத்தவர்கள் மண்டபங்களில் வைத்து திருமணம் செய்வார்கள்.

   

யாகம் வளர்த்து தாலி கட்டி விட்டால் திருமணம் முடிந்துவிட்டது என்று இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் இளைஞர்கள் திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதாவது சங்கீத் ,மெஹந்தி, ஹெல்தி, நிச்சயதார்த்தம் அதன் பிறகு திருமணம் என திருமணத்தையே ஒரு வாரம் கொண்டாட்டமாக கொண்டாடுகிறார்கள். அது மட்டுமா தற்போதையெல்லாம் மணமேடைக்கு வரும் மணமகளும் நடனம் ஆடுவது அரங்கேறி வருகின்றது.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. மணப்பெண் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டு வருகிறார். இந்த பாடல்கள் அனைத்தும் குத்து பாடலாக உள்ளது. புடவை கட்டிக்கொண்டு நகைகள் அணிந்து, மாலை அணிவித்து குத்து பாடலுக்கு அவர் நடனமாடி வருவதை மண்டபத்தில் இருந்து அனைவரும் வியந்து பார்த்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.