கல்லானாலும் கணவன்…. புயலானாலும் புருஷன்….! மாண்டஸ் புயலில் தொலைந்து போன கணவன்…. கண்ணீருடன் தேடிய மனைவி…. வைரல் வீடியோ….!!!

தனது கணவனை புயலில் காணவில்லை என்று மனைவி அழுது கொண்டே தேடும் வீடியோவானது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் கடற்கரை கடைகளை பிரித்து மேய்ந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர், நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்த்தது.

   

அந்த வகையில் உத்தண்டி குப்பத்தில் கடல் நீர் உட்புகுந்ததால் சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. கொட்டும் மழைக்குள் பெண் ஒருவர் பரிதவிப்புடன் தனது கணவரை காணவில்லை என்று தேடிக் கொண்டு வந்தார். கல்லூரி ஒன்றில் கூலி வேலைக்கு சென்று விட்டு தற்போது தான் வீடு திரும்பியதாகவும் தனது வீட்டிற்குள் நீர் புகுந்துள்ளதால் தனது கணவரை காணவில்லை என்று அவர் தேடி செல்வதாக கூறியிருந்தார்.

அதன் பிறகு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்ணையும் அவரின் கணவரையும் பத்திரமாக மீட்டு எடுத்தனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தனது கணவனை காணவில்லை என்ற பதத்துடன் மனைவி தேடுவது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.