கல்லூரியின் கடைசி நாள்… ஆயிரம் பேர் முன்னாள் காதலை சொன்ன மாணவன்… காதலியின் க்யூட் ரியாக்சனைப் பாருங்கள்..! வைரல் காட்சி

முன்பெல்லாம் காதலியை சந்திப்பதே குதிரைக் கொம்பான விசயமாக இருக்கும். அவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வரும்போதோ, ஆலய விழாக்களுக்கு வரும்போதோ தான் அவர்களின் கடைக்கண் பார்வை கிட்டும்.

   

கண்கள் இரண்டால் பாடல் இடம்பெறும் சுப்பிரமணிய புரம் திரைப்படப் பாணியில் தான் அன்றெல்லாம் காதல் இருந்தது. ஆனால் இன்றோ, காதல் வெகுவாக மாறிவிட்டது.

இப்போதெல்லாம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என படக், படக்கென காதலை சொல்லிவிடுகிறார்கள் டூ கே கிட்ஸ். அதிலும் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினி முகர்ஜியை பார்த்த சில நிமிடங்களிலேயே காதலைச் சொல்வார் கமல் இதைக்கேட்டதும் கமலினி இப்போதுதானே பார்த்தீர்கள் என்பார். உடனே கமல் எனக்கு இதுவே லேட் என்பார்.

அதேபோல் இந்த தலைமுறையினர் கண்டதும் காதல் விசயத்துக்குள் நுழைந்து விட்டனர். அதிலும் அவர்களுக்கு கடுகளவுகூட அச்ச உணர்வே இல்லை. இங்கேயும் அப்படித்தான் பள்ளிக்கூடத்தில் பேர்வெல் டே நடக்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் முன்பு ஒரு வாலிபர் காதலை தன் காதலியிடம் ப்ரபோஸ் செய்கிறார். உலகம் எங்கே செல்கிறது? இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.