கழுகு பட நடிகர் கிருஷ்ணாவின் முதல் மனைவி யாரு தெரியுமா? வெளியான அவரின் திருமண புகைப்படம்

தமிழ் சினிமாவில் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் அலிபாபா திரைப்படத்தின் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் தான் கிருஷ்ணா. அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்தத் திரைப்படத்தை சக்தி சிவா என்பவர் இயக்கியிருந்தார். நாயகியாக பிந்து மாதவி நடித்திருந்தார்.

   

முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. மேலும் இவர் நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, கடைசியாக இவர் கழுகு 2 திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணா நடிகை சுனைனா உடன் காதலில் இருந்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இவருக்கு ஹேமலதா என்பருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணமானது, மேலும் இவரின் மனைவியான ஹேமலதாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதோ அவர்களின் திருமண புகைப்படம்.