காதலனுக்காக பல ஆண்டுகள் காத்திருந்த காதலி… கடைசியில் மகன் கண்டுபிடித்த உண்மை… சினிமாவையே மிஞ்சும் நிஜ சம்பவம்..!

காதல் மிக, மிக புனிதமான ஒன்று. உண்மைக்காதலுக்கு ஒருநாளும் அழிவு என்பதே கிடையாது. அந்தவகையில் இங்கேயும் ஒருவர் தன் காதலன் வருவார் எனப்பல ஆண்டுகள் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இரண்டாம் உலகப்போரை உலகமே மறக்காது.

   

 

அப்போது இங்கிலாந்தில் இராணுவத்தளம் அமைத்து இருந்த அமெரிக்க வீரர்களில் ஒருவரான வில்பெட்ர் வில்லி , பெட்டி என்ற இளம்பெண்ணை நடன விடுதி ஒன்றில் சந்தித்தார். அவர் இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அமெரிக்காவுக்குச் சென்ற தன் காதலர் திரும்ப வருவார் எனப் பல ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால் வில்பர்ட் திரும்ப வராததால் அவர் இறந்துவிட்டார் என நினைத்து வேறு ஒருவரை கல்யாண்ம் செய்துகொண்டார் பெட்டி. அதேநேரம் பெட்டிக்கும், வில்பெர்ட்க்கும் பிறந்த ஒரு மகனும் வளர்ந்து வந்தார்.

பெட்டியின் இறப்புக்கு பின் டி.என்.ஏ சோதனை மூலம் தன் உறவுகளை தேடினார் வில்பெர்ட் அப்போதுதான் இங்கிலாந்துக்குப் போன தன் அப்பாவுக்கு அங்கு ஒரு குடும்பமே இருப்பது தெரியவந்தது. வில்பெர்ட் ஆப்பிரிக்க அமெரிக்கர். பெட்டி பிரித்தானியர். அமெரிக்காவில் அன்றைய காலத்தில் கலப்பினத் திருமணம் சட்டவிரோதமாக இருந்ததால் அவரால் முறிப்படி பெட்டியை திருமணம் செய்து அழைத்துச்செல்ல முடியவில்லை. பெட்டி, வில்பர்ட் மகனான பில்லுக்கு இப்போது 75 வயது.

 

இந்த வயதில்தான் அவர் டி.என்.ஏ டெஸ்ட் செய்து தன் தந்தையின் உறவினர்களை கண்டுபிடித்துள்ளார். ஏற்கனவே தன் தந்தை, அவரது மகன் ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் தன் தந்தையின் சகோதிரிகள் அதாவது தன் அத்தை மகள்களை வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். பில்லீஸ், ரிகைனா என்னும் இரு சகோதிரிகளும் லாக்டவுண் முடிந்ததும் இவரை சந்திக்க ஆர்வமாக உள்ளனர்.