காமெடியில் கலக்கிய நடிகர் ஜனகராஜ்… தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? வெளியான புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் 80களில் காமெடி நடிகராக கலக்கியவர் நடிகர் ஜனகராஜ். இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் காமெடியில் அசத்தியவர். அதற்குப் பிறகு இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் அது குறித்த உண்மை தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அவர் சென்னையில் தான் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. பல முன்னணி நடிகர்களுடன் காமெடியில் அசத்திய ஜனகராஜ் காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் அதிக அளவு நடித்துள்ளார். தற்போது இவருக்கு வயது 67.

இந்நிலையில் இவரின் சமீபத்திய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் ஷூட்டிங்கில் அவரை நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் சந்தித்து பேசி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்.