காமெடி கிங் கவுண்டமணியின் மனைவியை பார்த்துள்ளீர்களா? முதன்முறையாக வெளியான அவரின் திருமண புகைப்படம்- இதோ!!

தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர் காமெடி நடிகர் கவுண்டமணி. 80 – 90 களில் நகைச்சுவை என்றாலே அனைவர் நினைவிருக்கும் வருவது கவுண்டமணி செந்தில் தான். அந்த காலத்தில் செந்திலுடன், கவுண்டமணி கொடுத்த காமெடி காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இதுவரை எந்த காமெடியும் வரவில்லை என்றே கூறலாம். இவர்களின் வாழைப்பழம் காமெடி இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.

   

ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக் என பலருடன் நடித்துள்ளார். காமெடி நடிகர்கள் பலர் இப்போது வந்துவிட்டார்கள். இவருக்கென்று மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் அனைத்து திரைப்படங்களிலும் கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் வரும் காமெடி காட்சியில் காலங்கள் தாண்டியும் அனைவராலும் ரசித்து வரப்படுகிறது.

மேலும் கடந்த 10 வருடங்களாக அதிகமாக திரைப்படங்களில் ஏதும் கவனம் செலுத்தாமல் இருந்து வரும் கவுண்டமணி, கடைசியாக வாய்மை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல நட்சத்திரங்களின் அரிதான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது கவுண்டமணியின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், கவுண்டமணிக்கு கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவருடன் திருமணம் ஆனது. அப்போது எடுக்கப்பட்ட அரிதான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.