கிழிந்த உடையணிந்து சென்ற மாணவி.. அதை பார்த்த பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க..!

சாலையோரம் பானி பூரி விற்பவர்களை நம்மில் பலரும் ஏளனத்துடனும், கேலியுடனும் தான் பார்த்து வருகிறோம். ஆனால் அது எவ்வளவு அபத்தம்…அவர்களுக்குள் எவ்வளவு மனிதத்துவம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

பெங்களூரில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியில் வடநாட்டை சேர்ந்த சுசந்த் என்னும் நபர் தன் அம்மா, மற்றும் தங்கையுடன் வசிக்கிறார். இவர் தான் வாழ்ந்துவரும் சிறுவீட்டின் அருகே உள்ள ஸ்கூல் வாசலில் பானிபூரி கடை போட்டிருக்கிறார். அந்த பள்ளியில் இருந்து வெளியே சைக்கிளில் வந்தார் மாணவி ஒருவர்.

அவர் தன் ஸ்கூல் பேக்கை சைக்கிள் முன்கூடையில் வைத்துவிட்டு சைக்கிளை உருட்டிக்கொண்டே நடந்து போனார். அப்போது மாணவியின் முதுகுப்பக்கம் ஆடை கிழிந்து இருப்பதைப் பார்த்தார் பானிபூரி விற்றுக்கொண்டிருந்த சுசன்.

இதைப் பார்த்த பலரும் சர்வ சாதாரணமாக கடந்து போன நிலையில் இதைப்பார்த்த சுசந்த் மாணவியை நிற்கச் சொன்னார். தொடர்ந்த் தன் தங்கச்சிக்கு போன் போட்ட சுசன் தன் வீட்டில் இருக்கும் ஸ்வெட்டரை எடுத்துவரச் சொல்லி இருக்கிறார்.

தன் தங்கை மூலமே அதை அந்த மானவியிடம் சொல்லி ஸ்வெட்டரை கொடுக்கச் சொனதோடு வீடு வரை அந்த பெண்ணை துணைக்கும் அனுப்பி விட்டிருக்கிறார்.

சுசந்தைப் பார்க்க மறுநாள் ஸ்வெட்டர், தன் அம்மாவோடு வந்தார் அந்த மாணவி. அப்போது மாணவியின் அம்மா சுசந்தை கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார். தொடர்ந்து கஷ்ட ஜூவனத்தில் இருக்கும் சுசந்த்க்கு பண உதவி செய்யவும் முன்வந்து இருக்கிறார். ஆனால் அதற்கு சுசந்தோ எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறார். நான் இந்த பொண்ணையும் அப்படித்தான் நினச்சேன். பண உதவி எதுவும் வேண்டாம் என மறுக்கவும் செய்திருக்கிறார்.

இந்த பானிபூரி காரரின் மனிதத்துவம் பாராட்ட வேண்டிய விசயம் தானே? பாராட்ட நினைத்தால் அதிகம் பகிருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *