குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றியாளர் இவர்தானா? வெளியான தகவல்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ குக் வித் கோமாளி தான். இந்நிகழ்ச்சி தான் தொலைக்காட்சி ரசிகர்களின் உயிர் மூச்சாக இருக்கிறது. தற்போது டிஆர்பியில் கலக்கி கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி. முதல் சீசனில் இருந்த கலாட்டாவை விட இந்த இரண்டாவது சீசன் படு காமெடியாக உள்ளது. ஆனால் என்ன சோகம் என்றால் ஒரு சில நிகழ்ச்சியில் பிரபலங்கள் யாராவது வராமல் போய் விடுகின்றனர்.

   

இதையடுத்து இந்த சீசன் நிறைவடைய இறுதி வாரத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே, இறுதி சுற்றுக்கு முதல் நபராக கனி தேர்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகினர். எனவே, இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்ற செய்தி தற்போது ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அதில், குக் வித் கோமாளி சீசன் 2ல் வெற்றியாளர் பாபா பாஸ்கர் அல்லது அஸ்வின் ஆகியோர் இருவரில் ஒருவர்தான் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

மேலும், இவர்கள் இருவருக்கும் கடும் போட்டியே நிலவுகிறது. அனைவரையும் ரசிக்க வைக்கும் பாபா பாஸ்கரும், பல கஷ்டங்களை தாண்டி இந்த இடத்தில் நின்று ரசிகர்களை கவர்ந்த அஷ்வினுக்கும் ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகிறது. இருப்பினும் இன்னும் ஒரு சில வாரத்தில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும் ஆகையால் அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.