விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது. நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறக்கப்பட்டவர் ரித்திகா.
ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.ஆனால் உள்ளே வந்த 3 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரித்திகா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது, “இன்ஸ்டாகிராம் நண்பர்களே.
கவலைப்பட வேண்டாம். குறைந்த ரத்த அழுத்தம் & உணவு ஒவ்வாமை தான். இன்னும் நான் உடல்நலக்குறைவாக இருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் தேறிவருவதாக எண்ணுகிறேன். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி. அனைவரும் உடல்நலனில் அக்கறையோடு இருங்கள்” என்று கூறியுள்ளார். ரித்திகாவின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்த குக் வித் கோமாளி ரசிகர்கள் அவர் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.