குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறப் போவதில்லை! மணிமேகலை வெளியிட்ட பதிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்!

   

தொகுப்பாளினியாக இருந்து தற்போது விஜய் டிவியில் ஒரு முக்கியமான நபராக இருப்பவர் மணிமேகலை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. இந்நிலையில் குக் வித் கோமாளி பங்கேற்ற மணிமேகலை இரண்டு வாரம் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி சமையலும், நகைச்சுவையும் கலந்த ஒரு நிகழ்ச்சி என்பதால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் தனித்து காமெடி செய்து ரசிகர்களைப் பெற்றுள்ளவர் இவர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்நிகழ்ச்சியில் தான் பங்கு பெறப் போவதில்லை என மணிமேகலை தெரிவித்துள்ளார். அது குறித்து இன்ஸ்டாகிராமில், “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் படிச்சேன், நல்லா இருந்தது இந்த மேற்கோள். எனக்கு குட்டி விபத்து ஏற்பட்டிருக்கு, ஆனால், இப்போது நலமாக இருக்கிறேன்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்வேன். நிச்சயம் எனது குழுவை மிஸ் செய்வேன், ஒரு வாரத்தில் திரும்ப வந்துவிடுவேன், உங்கள் உடல் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கிய குறிப்பு – முக்கியமா சுடு தண்ணி தூக்கும் போது பாத்து தூக்குங்க,” எனக் குறிப்பிட்டுள்ளார். சுடு தண்ணி தூக்கும் போது அந்தப் பாத்திரம் தவறி கீழே விழுந்து மணிமேகலைக்கு காயம்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)