குக் வித் கோமாளி புகழின் வருங்கால மனைவியா இது? என்ன அழகுன்னு பாருங்க…. வைரலாகும் புகைப்படம்..!

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது.

   

அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது. அதிலும் விஜய் டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர்.

அந்தவகையில் விஜய் டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் விஜய் டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான். அந்த வரிசையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் வரும் விஜய் டிவி புகழும் ரொம்ப பேமஸ்.

சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு. காமெடி கில்லாடீஸ் என பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கேப் போனார் புகழ். இவரது குறும்புத்தனமும், குழந்தைத்தனமான முகபாவமும் அனைவரையும் ரசிக்கவைத்தது.

அதிலும் நடிகை ரம்யா பாண்டியனோடு சேர்ந்து இவர் செய்த லூட்டி வேற லெவல் என்றே சொல்லலாம். விஜய் டிவி தந்த புகழ் வெளிச்சத்தில் புகழ் இப்போது பல முன்னணி நடிகர்களோடும் நடித்து வருகிறார்.

காமெடி ராஜா கலக்கல் ராணி என்னும் எபிசோடிலும் அசத்தினார். ஆனால் அதில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். இப்போது புகழ் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு கீழ் லவ் யூ என்னும் கேப்சனும் போட்டுள்ளார்.

கூடவே ஹேப்பி பர்த்டே பாட்னர் எனவும் அதில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அடடே நம்ம புகழின் வருங்கால மனைவியா இது? அழகாக இருக்கிறாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.