குக் வித் கோமாளி ஷிவாங்கியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? உச்சக்கட்ட மகிழிச்சியில் இருக்கும் குடும்பம்!! வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், அதுவே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது நடிகை ஷகிலா, அஸ்வின், பவித்ரா லட்சுமி, பாபா பாஸ்கர், கனி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக உள்ளனர்.

   

மேலும், புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத் ஆகியோர் கோமாளிகளாக செம சேட்டைகள் செய்து வருகின்றனர். அதிலும் சிறுபிள்ளைத்தனமாக ஷிவாங்கி செய்யும் ரகளைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவருக்காகவே நிகழ்ச்சிகள் பார்ப்பவர்கள் பலர். ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். மேலும் அவரது தந்தை கிருஷ்ணகுமார் மற்றும் தாய் பின்னி கிருஷ்ணகுமார் இருவருமே கர்நாடக பாடகர்கள்.

இந்நிலையில் அவரது தந்தை, தாய் இருவருக்கும் தற்போது கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஷிவாங்கி, வாழ்த்துக்கள் ‘கலைமாமணி’ கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார். அப்பா அம்மா இருவரும் இந்த விருது பெற்றதில் மிகவும் பெருமை என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சந்திரமுகி படத்தில் புகழ்பெற்ற “ரா ரா’ பாடலை ஷிவாங்கியின் அம்மாதான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)