தற்போது வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு தான். சூப்பர் சிங்கர், ஜோடி, கலக்கப் போவது யாரு போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் முதன்மையாக ஓடி வருகிறது. இந்நிலையில் இதில் கடந்த வருடம் ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சி என்றாலே பெண்களுக்கானது. மேலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் வெறுத்துவிடும் நிலையில் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதற்கு அப்படி நேர்மாதிரியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும்அளவிற்கு நகைச்சுவை கலந்த நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது.
குக் வித் கோ மாளி 2 நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் ரீச் பெற்றவர் அஷ்வின். அழகான இளம் நடிகராக இந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்களின் மனதை கவர்ந்துவிட்டார்.வாரா வாரம் ஒரே மாதிரியான சமையலை சமைக்காமல் வித்தியாசம் காட்டுவார், நடுவர்களே அசந்துவிடுவார்கள்.
தற்போது அஷ்வின் இந்நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.அவருக்கு இனிமேல் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என அவரது ரசிகைகள் வேண்டிக்கொண்டு வருகிறார்கள் என்றே கூறலாம்.
இந்த நேரத்தில் தான் அஷ்வின் ஒரு விஜய் டெலி அவார்ட்ஸ் விருதில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது.அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம அஷ்வினா இது, சில வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர்.