குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் 4வது பைனலிஸ்ட் இவர்தான்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

குக் வித் கோமாளி தான் இப்போது மக்களின் பெரிய பேச்சாக உள்ளது. சமையல் போட்டி என்றாலும் சிரிப்புக்கு நிகழ்ச்சியில் பஞ்சமே இல்லை. மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. TRPயை விட மக்கள் மனதில் பெரிய இடத்தை நிகழ்ச்சி பிடித்துவிட்டது. வாரா வாரம் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

   

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் யார் வெற்றியாளர் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் பெரிய ஆர்வம் காட்டினார்கள். ஆனால் இப்போது அதைவிட குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை பற்றி அரிய தான் மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். அரைஇறுதி போட்டியில் கனி, பாபா பாஸ்கர், அஷ்வின் 3 பேரும் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள். இந்த 3 பேருடன் போட்டிபோடும் 4வது போட்டியாளர் யார் என்பது இந்த வார நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு தெரிய வரும்.

இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரீ, எனவே இதுவரை வெளியேறிய அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். 4து போட்டியாளராக இந்த வைல்ட் கார்ட் போட்டியில் இருந்து தேர்வாகி இருப்பது ஷகீலா அவர்கள் தானாம். இவரை மக்களே எதிர்ப்பார்த்த ஒரு போட்டியாளர் தான். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து நல்ல டிஷ் கொடுத்து வந்தார்.