குக் வித் கோமாளி 2 பிரபலங்களில் ஷிவாங்கிக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் விஷயம்- கொண்டாட்டத்தில் பிரபலம்

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடி மக்களின் பேராதரவை பெற்றது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியின் பங்குபெற்றதன் மூலம் பலரின் வாழ்க்கை அப்படியே நல்ல விதமாக மாறியுள்ளது. அதற்கு உதாரணமாக ஷிவாங்கி, அஷ்வின் முக்கியமாக ஷகீலா அவர்களின் இமேஜ் இப்போது மக்கள் அம்மா என்று அழைக்கும் அளவிற்கு மாறியுள்ளது.

   

நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அனைவரும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு இடையில் தான் ஷிவாங்கி ரசிகர்கள் ஒரு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதாவது ஷிவாங்கியின் இன்ஸ்டா பக்கம் 3 மில்லியனை எட்டிவிட்டதாம், இதனை அவரே பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களும் அவருக்கு 3 மில்லியன் குடும்பத்திற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். ஷிவாங்கியை தவிர வேறு எந்த பிரபலத்தின் பக்கமும் 3 மில்லியன் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.