
நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமான கோவில் ஒன்றுக்கு தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் திரையுலகில் ”மெரினா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்பொழுது இவர் எண்ணற்ற திரைப்படங்களை நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஏலியன் திரைப்படமான ‘அயலான்’ திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இதை தொடர்ந்து அவர் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக கமலஹாசன் ராஜ்கமல் ஃபிலிம் என்ற நேஷனல் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், அவ்வப்போது தனது குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க கூடியவர். இவர் தனது குடும்பத்துடன் திருக்கடையூர் கோவில் சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளார்.. இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்யும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ இந்த புகைப்படம்….