குளுக்கோஸ் பாட்டிலுடன் சாலையில் செல்வோரை துரத்திய ‘கொரோனா’ பேஷன்ட்’.. ‘அலறியடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்…!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவிரைவாக பரவி வரும் நிலையில் பாரம்பரிய கலைகள் மூலம் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதுபோன்று கொடைக்கானலில் போலீசார் வித்தியாசமான முறையில் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தால், பொதுமக்கள் அலறியடித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

   

அதாவது, ஊரடங்கை மீறி சாலையில் மக்கள் நடமாட்டம் கொடைக்கானலின் முக்கிய பகுதியான நாயுடுபுரத்தில் காணப்பட்டது, அப்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நபர் கையில் குளுக்கோஸ் பாட்டிலுடன் சுற்றியுள்ளார்.

அந்த நபரைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த கொரோனா நோயாளியோ அங்கிருந்தவர்களிடம் கொரோனா நோயாளியான தன்னைக் காப்பாற்றுங்கள் என பொதுமக்களிடம் கெஞ்சியுள்ளார்.

இதனால் அச்சத்துடன் பொதுமக்கள் கையில் இருந்த பொருட்களை எல்லாம் போட்டுவிட்டு பீதியடைந்து தலைதெறிக்க ஓடினர். ஒரு சிலர் நோயாளி போல் வேடமிட்டிருந்த நபர் மக்கள் கொம்பால் விரட்டி, வேறெந்த பொருட்களையும் தொடக்கூடாது என மிரட்டினர்.

அதன்பின் மக்களிடையே பரபரப்பு அதிகமானதால், இந்த நிகழ்வு கொரோனா குறித்து மக்களிடையே அச்சத்தை உண்டாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நாடகம் என போலீசார் தெரிவித்தனர்.