இணையத்தில் ரசிகர் ஒருவரின் மோசமான கேள்விக்கு நடிகை பிரணிதா சரியான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் நடிகை பிரணிதா பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சைமா, ஃபிலிம் பார் போன்ற பல விருதுகளையும் பெற்றவர் நடிகை ப்ரணிதா.
கன்னட நடிகையான இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு படம் பட வாய்ப்புகள் குறையவே தொழிலதிபர் நித்தின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது கணவரின் பிறந்தநாள் அன்று கர்ப்பமாக இருக்கும் தகவலை ஸ்கேனிங் போட்டோவுடன் வெளியிட்டார்.
இதை தொடர்ந்து ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘அர்னா ‘ என்று பெயர் சூட்டினார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பிரணிதா. இவர் தனது குழந்தையுடன் அவ்வப்பொழுது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் குழந்தை பராமரிப்பு பற்றிய கேள்விகளை கேளுங்கள் என தனது பாலோவர்ஸிடம் கேட்டிருந்தார் பிரணிதா. அப்போது ஒரு நபர் ‘குழந்தை பிறந்த பிறகும் எப்படி இவ்ளோ ஹாட்டாக இருக்கிறீர்கள்’ என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த பிரணிதா, ‘நான் இந்த QA செக்ஷன் நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தேன். ஆனால் நீங்கள் இங்கு வந்து தவறான கேள்வி கேட்கிறீர்கள்’ என பதிலடி கொடுத்துள்ளார்.