கேரவனில் தேம்பித் தேம்பி அழுத நடிகர் தனுஷ்! தீயாய் பரவும் வீடியோ- வருத்தத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகி இருப்பவர் நடிகர் தனுஷ். அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது தமிழ் நடிகர்களில் மிகவும் பிசியாக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆம் தொடர்ந்து 10 படங்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

   

நடிகர் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் கேரவனில் தேம்பித் தேம்பி அழுததாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அதாவது தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ், ஒருகாலத்தில் படாத அவமானமே கிடையாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில் தன்னை அவமானப் படுத்தாத ஆளே கிடையாது என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த தகவல்களை தற்போது தனுஷ் வீடியோ ஒன்றில் பதிவிட்டு இருப்பதோடு, ஒருவரின் உருவத்தை பார்த்து கேலி செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.