கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைக்க எட்டரை லட்ச ரூபாய் கேட்ட தனியார் மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்!!

பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்ற வம்சிகிருஷ்ணா என்பவர் கடந்த 22ம் தேதி உயிரிழந்தார்.

   

சிகிச்சைக்கு 20 லட்ச ரூபாய் கட்டணம் விதித்த மருத்துவமனை நிர்வாகம், எஞ்சிய எட்டரை லட்ச ரூபாயை செலுத்துமாறு உறவினர்களிடம் கூறியுள்ளது.

ஆத்திரமடைந்த வம்சி கிருஷ்ணாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி, மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்குள்ள பொருட்களை சூறையாடினர்.

இதனிடையே விதிகளை மீறி, அதிக தொகை வசூலித்ததாகக் கூறி, அந்த மருத்துவமனைக்கான அனுமதியை ரத்து செய்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.