கொரோனாவுக்கு 4 மகன் ஒரு மருமகள் பலி : இரு நாட்களுக்கு பின் தகவல் அறிந்த தாய்க்கு அரங்கேறிய சோகம்!!

கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் பலியாகி விட்டதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வராஜ் (வயது 42). இவரது மனைவி சாந்தி (வயது 35). இவர்கள் இருவருக்கும் கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

இதையடுத்து தெய்வராஜின் அண்ணன்கள் ராஜா (வயது 50), சவுந்தரராஜன்(வயது 45), தங்கராஜ் (வயது 52) ஆகியோரும் கொரோனாவால் இறந்துவிட்டனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் அடுத்தடுத்து சில நாட்களில் கொரோனாவால் இறந்த தகவல் அவர்களின் தாயார் பாப்பாளுக்கு(வயது 70) தெரிவிக்கப்படவில்லை.

அவரும் வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்த நிலையில் தனது மகன்கள், மருமகள் யாரும் வராததைக் கண்டு உறவினர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு உறவினர்கள் மகன்களும், மருமகளும் கொரோனா நோய் தொற்றால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன பாப்பாள் இறந்து விட்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.