கொரோனா தொற்று அச்சத்தால் ஊரை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் தற்காலிக வீடு அமைத்த கிராம வாசிகள்..!

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே கொரோனா தொற்று அச்சத்தால் ஊரை விட்டு வெளியேறி கிராம வாசிகள் வயல் வெளிகளில் தற்காலிக வீடு அமைத்து வசித்து வருகின்றனர்.

சிவாடி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனர் ரெட்டி, வெங்கடரமணா மற்றும் ஈஸ்வர்யா ஆகியோர் கொரோனா அச்சத்தால்,

   

தாங்கள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி கடந்த மூன்று வாரங்களுக்கு முன் விவசாய தோட்டத்தில் குடியேறியதுடன்,

தோட்ட வேலைகளை கவனித்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுள்ளதாகவும், தேவை போக மீதியை நண்பர்களுக்கு கொடுத்து உதவுவதாகவும் கூறினர்.

மேலும், தங்களை பார்த்து உறவினர்கள் சிலர் கிராமத்தை விட்டு வெளியேறி வயல்வெளிகளில் தற்காலிக வீடுகள் அமைத்து வருவதாகவும் கூறினர்.