சன் டிவியின் பிரபல சீரியலில் நடித்துள்ள நடிகை ஷகீலாவின் மகள்.. எந்த சீரியல் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் ஷகிலா மக்கள் மனதில் சிறந்த ஒரு இடத்தினை பிடித்திருக்கின்றார். சினிமா நடிகர்கள் மத்தியில் நடிகை ஷகிலா எப்படிபட்ட பெயரை பெற்றார் என்பது நமக்கு தெரியும். ஆனால் இப்போது ஷகிலா என்றால் நாம் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

   

கடைசியாக நடந்த அரை இறுதி நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஷகிலா எலிமினேட் செய்யப்பட்டார். அப்போது பேசிய ஷகிலா இந்நிகழ்ச்சி மூலம் தனது இமேஜ் மாறியதாக அவரே கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக நடிகை ஷகிலா மகளாக தத்தெடுத்த திருநங்கை மிலா அவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. குக் வித் கோமாளி 2 பிரபலங்களுடன் அவர் புகைப்படங்கள் எடுக்க வைரலானது.

இந்த நேரத்தில் தான் அவரை பற்றிய ஒரு விவரம் வெளியாகியுள்ளது. திருநங்கை மிலா இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம். அந்த விவரம் வெளியாக இந்த நடிகரா ஷகிலாவின் மகள் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.