சாப்பாட்டுல சுவையை மட்டுமே பாக்கதீங்கண்ணே, ஆரோக்கியத்தை பாருங்க… ஹோட்டல் சப்ளையரின் ஆதங்கம்.. வைரலாகும் வீடியோ

என்னதான் வீட்டில் அம்மாவும், மனைவியும் வகை, வகையாக சமைத்தாலும் ஹோட்டலில் போய் ஆர்டர் செய்து சாப்பிடுவதில் தனி சுகம் தான். பலரும் லீவு நாள் என்றால் ஹோட்டல்களுக்கு நடையைக் கட்டி விடுகிறோம்.

   

இங்கேயும் அப்படித்தான் நடுத்தர வயதுக்காரர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிடப் போனார். அவர் இட்லி ஆர்டர் செய்தார். உடனே சப்ளையர் அவருக்கு இட்லி எடுத்துவந்து கொடுத்தார். உடனே, சாப்பிட வந்தவர் இட்லி கல் மாதிரி இருப்பதாகவும், வேறு இட்லி கொண்டுவருமாறும் சொன்னார். சீக்கிரம் கொண்டு வா..இல்லைன்னா வேற ஹோட்டலுக்கு போயிடுவேன் என்றும் அவர் சொல்ல சப்ளையர் வேற இட்லி கொண்டுவந்து கொடுக்கிறார்.

அதைச் சாப்பிட்டு முடிந்ததும், போகும்போது இட்லி சூப்பர் என சொல்லி செல்ல, ‘இது சோடா உப்பு போட்ட இட்லி. உடம்புக்கு கேடு. முதல்ல கொடுத்த இட்லி உடலுக்கு கேடு இல்லாதது. ஆனால் நீங்க சோடா உப்பு போட்ட இட்லியைத்தானே கேட்டு வாங்குறீங்க. இப்போல்லாம் 35 வயசுலயே இதனால் தான் ஹார்ட் அட்டாக் வருது. 50 வயசு தாண்டுறதே பெரிய விசயமா இருக்கு.’’என அறிவுரை சொல்கிறார். சப்ளையர் அறிவுரை சொல்லும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.