சாலையோர பூம்..பூம் மாட்டுக்காரருக்கு அடித்த ஜாக்பாட்… அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா? இவரது திறமையைப் பாருங்க..!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய இளைஞனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

   

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். திறமையை வைத்துக்கொண்டு அதற்கு உரிய வெளிப்படுத்தும் களம் கிடைக்காமல் பலரும் தவிப்பதைப் பார்த்திருக்கிறோம். அதேநேரம் ஏதாவது அதிசயம், அற்புதம் நடந்து அவர்களுக்கு நல்லது நடக்கும். அதேபோல் தான் சாலையோரத்தில் மாட்டைக் கூட்டிக்கொண்டு இசைத்துக் கொண்டே செல்லும் பூம்..பூம் மாட்டுக்காரருக்கு ஒரு அதிசயம் நடந்துள்ளது.

பூம்..பூம் மாட்டுக்காரர் சாலையோரம் நாதஸ்வரம் வாசித்துக்கொண்டே செல்லும் வீடியோவை பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை வெளியிட்ட அவர், இவரை கண்டுபிடித்தால் பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்தலாம். முக்கியமாக இவருடைய நோட்ஸ் ரொம்ப துல்லியமாக உள்ளது.’என்கிறார். இந்நிலையில் ட்விட்டரில், ஜி.வி.பிரகாஷை பாளோ செய்யும் நபர் ஒருவர் அவரை சாலையில் பார்த்து அவர் பெயர் நாராயணன், என்றும் அவரது போன் நம்பரை வாங்கியும் பதிவிட்டார்.

 

ஜி.வி.பிரகாஷ், அதைக் கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி சொன்னதோடு, கொரோனா காலம் முடிந்து சீக்கிரமே அவருடன் ரெக்கார்டிங் செய்யமுடியுமென நம்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார். ஏழை ஒருவருக்கு ஜி.வி.பிரகாஷ் செய்ய முயன்ற இந்த உதவிக்கு நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.