சினிமாவில் அறிமுகமாகும் பிரபல காமெடி நடிகரின் மகன்…. பார்க்க அச்சு அசலா அப்பாவ போலவே இருக்காரே… தீயாய் பரவும் தகவல் இதோ…

காமெடி நடிகரான சாம்ஸ் அவர்களின் மகன் யோகன் தற்பொழுது வெள்ளி திரையில் அறிமுகமாக உள்ளார். இதனை அவரே தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக காமெடி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் சாம்ஸ். இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் மன்னன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

   

ஹீரோக்களின் வாரிசுகள்  ஒரு பக்கம் வாரிசு நடிகர்களாக களமிறங்கி வருகின்றனர். இன்னொரு புறம் காமெடி நடிகர்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் மகன் யோஹன் சினிமாவில் தற்பொழுது அறிமுகமாக இருக்கிறார்.

நடிகர் சாம்ஸ் மகன் யோகன் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சியும், தனியார் திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பயிற்சியும் முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் நடிகராக களம் இறங்க தயாராகி விட்டதாக நடிகர் சாம்ஸ் தனது இணையதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எனது மகன் “யோஹன்” – “FALL” என்ற வெப் சீரிசில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக பல வெற்றி படங்களை தந்த சித்தார்த் அவர்கள் முதல் முறையாக இயக்கி, அஞ்சலி அவர்கள் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.இது Disney+ Hotstarல் வருகிற டிசம்பர் 9’ம் தேதி வெளியாகவுள்ளது அதன் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.  இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.