சின்னப்பிள்ளை போல் ஓடிவிளையாடும் பாட்டிகள்.. அடேங்கப்பா அவர்களுக்கு இருக்கும் சந்தோசத்தைப் பாருங்க..!

வயது என்பது வெறுமனே எண்ணிக்கை தான். மனம் இளமையாக இருந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தநாள் தான் எனச் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா?

பொதுவாகவே இளம் தலைமுறையினர் தான் மிகுந்த ஆர்வத்தோடு விளையாடுவதைப் பார்த்திருப்போம். வயோதிகர்களோ வெற்றிலையைப் போட்டுவிட்டு தன் வயதொத்தவர்களிடம் இருந்து ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருப்பார்கள். அதிலும் வயதான பாட்டிகளோ வெறுமனே அடுப்படியே, திருப்பதி என முடங்கிக் கிடப்பார்கள். இன்னும் சிலர் பேரப்பிள்ளைகளோடு பொழுதைக் கழிப்பார்கள்.

   

இங்கே நம் தமிழகத்தில் ஒரு ஊரில் திருவிழா வந்தது. அங்கு விளையாட்டுப் போட்டிகள் பலதும் நடந்துவந்தது. அப்போது, அங்கே ஒரு மியூசிக்கல் சேர் போட்டி நடந்தது. பொதுவாகவே மியூசிக்கல் சேர் போட்டியில் இளம் பெண்களும், இளைஞர்களும் தான் ஆர்வமாகக் கலந்து கொள்வார்கள். ஆனால் இங்கு ஒரு கிராமத்தில் வயோதிகர்களுக்கான மியூசிக்கல் சேர் போட்டி நடந்தது.

அதில் மிகுந்த உற்சாகத்தோடு பாட்டிகள் சேரை சுற்றி வந்தனர். அவர்களில் ஒரு பாட்டி, ரொம்பவே ஜாலி மூடில் சுற்றி, சுற்றி வந்து முதல்பரிசை தட்டிச் சென்றார். குறித்த இந்த வீடியோ விளையாட்டுக்கும், வெள்ளந்தித் தனத்திற்கும் வயது தடையே இல்லை என்பதைக் காட்டுவது போல் உள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.