தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமானவர். மேலும் அந்த சமயத்தில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்துவந்தார். ஆனால் நடிகை சிம்ரன் திருமணம், குழந்தைகள், குடும்பம் என சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகி இருந்தார். வெகு நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த பேட்ட படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
ஒரு ஹீரோயின் போலவே அவரின் இந்த கதாபாத்திரமும் அமைந்தது. சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் வில்லியாக நடித்திருந்தார். மேலும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதாக கூறி வந்தார். அண்மையில் உடல் தோ ற்றத்தை மிகவும் மாற்றி டிக் டாக்கில் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்டிருக்கும் அவர் நல்ல கதைக்காக காத்திருக்கிறார்.
சிம்ரனின் சகோதரி மோனலை அனைவர்க்கும் தெரியும். படங்களில் நடித்து வந்த அவர் காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்துகொண்டது அனைவரும் அறிந்த விஷயம். அவரின் குழந்தைளை, கணவரை பார்த்திருப்பீர்கள். தற்போது அவரின் சகோதரரின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.