
இயக்குனர் பா. ரஞ்சித் ஆர்யா, துஷாரா பசுபதி, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்த சார்பட்டரா பரம்பரை திரைப்படத்திற்காக விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றார். இதனையடுத்து அவர் அடுத்தடுத்து படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார்.
இவருடைய மனைவி அனிதா. இவர் தமிழ் சினிமாவில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக் சீயான் 61க்கான பட பூஜை இன்று நடைபெற்றது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
படத்தின் பெயர், நாயகி உள்ளிட்ட இதர நடிகர்களின் பெயர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. படம் 17ம் நூற்றாண்டை கதைக்களமாகக் கொண்டிருப்பதால் திருவண்ணாமலை பக்கம் லொகேஷன் பார்க்கிறார்களாம். நாயகியாக ஹூமா குரேஷியிடம் கதை சொல்லப்பட்டுள்ளதாம். இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி குழந்தைகள் மற்றும் அம்மாவோடு பூஜைக்கு வந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.