‘சீரியலில் மட்டும் தான் அடக்கம்.. நிஜத்தில் செம மாடர்ன்’… கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை… ஹாட் கிளிக்ஸ் உள்ளே…

‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை கனிகா தற்போது கிளாமர் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சன் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் கஸ்தூரி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பதற்கு முன்னரே இவர் மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னரப்பாக வென்றார்.

   

பின்னர் தமிழ் சினிமாவிற்குள் ‘5 ஸ்டார்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவர் ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக இவர் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை கனிகா.

இவர் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சீரியலில் மட்டும் தான் அடக்க ஒடுக்கமா?’என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.