
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘மாரி’ சீரியலின் ஹீரோயினான ஆஷிகாவின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் தான் ‘மாரி’. ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த சீரியலின் ரீமேக் சீரியல் தான் மாரி. தெலுங்கில் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்த ஆஷிகாவே தமிழிலும் நாயகியாக நடித்துள்ளார்.
மிக குறுகிய நாட்களிலேயே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் நடிகை ஆஷிகா கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழ்ச்செல்வி’ என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் தெலுங்கு, கன்னட மொழிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் தற்பொழுது தமிழில் ‘மாரி’ சீரியல் மூலம் ஒரு சூப்பர் என்ட்ரி கொடுத்துள்ளார். இது அவருக்கு சிறந்த கம் பேக்காக அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஆஷிகா. இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.