தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரவீந்தர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா?, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான். தயாரிப்பாளர் ரவீந்தர் மிகவும் குசும்பு பிடித்தவர்.
இவர் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொள்ளும் அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் உடனே பகிர்ந்து விடுவார். கல்யாணம் ஆனது முதல் கோயிலுக்கு சென்றது, ஹோட்டலுக்கு சென்றது, தன் மனைவி தன்னைக் கட்டிபிடித்தது வரை அனைத்து புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த புகைப்படத்தில் மகாலட்சுமியின் வயிறு சற்று பெரிதாக தெரிகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘மகாலட்சுமி கர்ப்பமாக உள்ளாரா?’ என்று இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு….
View this post on Instagram