சூப்பர் சிங்கர் சீசன் 8 பிரபலத்திற்கு திருமணம் முடிஞ்சாச்சு..! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பேராதரவுடன் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தொகுத்து வழங்கி வரும் மாகாபா, ப்ரியங்கா இருவருக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்போதுமே மிகவும் பிடித்த தொகுப்பாளர்கள் தான். சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. லாக் டவுன் போட்டதால் இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

   

இதில் தற்போது 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான். ஆம் விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக மக்களின் ரசனைக் கேட்ப நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் இயக்குனர் Ravoofa அவர்கள். ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் பலர் இருப்பார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் சீசன் 8ல் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் போட்டியாளர் அபிலாஷ். இவருக்கு கூடி விரைவில் திருமணம் என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறியிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் சிங்கர் 8 பிரபலம் அபிலாஷிற்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த புகைப்படம் இதோ..